உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,186 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,17,619 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் புதிதாக 29,991 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8,48,735 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஸ்பெயினில் 2,08,389, இத்தாலியில் 1,87,327, பிரான்சில் 1,59,877, ஜெர்மனியில் 1,50,648, பிரிட்டனில் 1,33,495, துருக்கியில் 98,674, ஈரானில் 85,996, சீனாவில் 82,798, ரஷ்யாவில் 57,999, பிரேசிலில் 45,757, பெல்ஜியத்தில் 41,889, கனடாவில் 40,190, பாகிஸ்தானில் 10,076, சிங்கப்பூரில் 10,141, மலேசியாவில் 5,532, இலங்கையில் 310, சவுதி அரேபியாவில் 12,772, ஐக்கிய அரபு அமீரகத்தில் 8,238, கத்தாரில் 7,141 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,345 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 47,663 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 21,717, இத்தாலியில் 25,085, பிரான்சில் 21,340, ஜெர்மனியில் 5,315, பிரிட்டனில் 18,100, துருக்கியில் 2,376, ஈரானில் 5,391, சீனாவில் 4,632, ரஷ்யாவில் 513, பிரேசிலில் 2,906, பெல்ஜியத்தில் 6,262, கனடாவில் 1,974, பாகிஸ்தானில் 212, மலேசியாவில் 93, சிங்கப்பூரில் 12, இலங்கையில் 7, சவுதி அரேபியாவில் 114, ஐக்கிய அரபு அமீரகத்தில் 52, கத்தாரில் 10 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.