Skip to main content

வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் இனி ஒரே நேரத்தில் 8 பேருடன் அரட்டை அடிக்கலாம்!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

உலகம் முழுவதும் 180 நாடுகளில் வாட்ஸ்அப் செயலி முன்னணியில் உள்ளது. 2 பில்லியன் பயனர்கள் உள்ளதாக வாட்ஸாப் நிறுவனம் சொல்கிறது. நாள்தோறும் ஒரு பில்லியன் பயனர்கள் ஒருமுறையாவது வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாமல் இருந்ததில்லை என்கின்றன தரவுகள்.


காலத்தின் தேவைக்கேற்ப வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு வசதிகள் (அப்டேட்) கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை வாட்ஸ்அப் செயலி மூலமாக வீடியோ அழைப்பில் ஒரே நேரத்தில் நான்கு பேருடன் மட்டுமே குரூப் கால் செய்யும் வசதி இருந்து வந்தது. தற்போது, வீடியோ அழைப்பில் ஒரே நேரத்தில் 8 பயனர்களை இணைத்துக்கொண்டு பேசும் வகையில் புதிய வசதியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. whatsapp update video call option

இந்த புதிய வசதி, 2.20.50.25 என்ற ஐஓஎஸ் மொபைல் போன்களிலும், 2.20.133 என்ற ஆண்டிராய்ட் இயங்கு தளத்திலும் கிடைக்கும். மேற்கண்ட இயங்கு தளங்கள் கொண்ட பயனர்கள் மட்டுமே இந்த புதிய சேவையைப் பெற முடியும்.

முன்னதாக மேற்கண்ட இயங்கு தளங்கள் கொண்ட மொபைல் போனில், வாட்ஸ்அப் செயலியை ஒருமுறை அப்டேட் செய்துகொள்வது அவசியம். மேலும், உங்கள் போன் காண்டாக்ட் புக்கில் பதிவு செய்யப்பட்ட எண்களை மட்டுமே வீடியோ குரூப் அழைப்பில் இணைக்க முடியும் என்கிறது வாட்ஸ்அப் பீட்டா இன்போ நிறுவனம். வாட்ஸ்அப் செயலில் அரட்டை கச்சேரியில் மூழ்கிக் கிடக்கும் பிரியர்களுக்கு இந்த ஊரடங்கு நேரத்தில் மேலும் குதூகலம்தான்.

 

 

சார்ந்த செய்திகள்