உலகில் முன்னணி கார் தயாரிக்கும் நிறுவனமான "வால்வோ" நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் ஸ்வீடன் நாட்டை சார்ந்தது. அந்த எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்க முக்கிய உதிரிபாகங்களாக உள்ளது லித்தியம் பேட்டரி ஆகும். இந்த லித்தியம் அயன் பேட்டரிகளை உற்பத்தி செய்யும் சிஏடிஎல் மற்றும் எல்ஜி கெம் நிறுவனகளுடன் வால்வோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் உலக முழுவதும் உள்ள தனது கார் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இந்த இரு நிறுவனங்கள் பேட்டரிகளை சப்ளை செய்ய வேண்டும் என்பது தான்.
இத்தகைய நிறுவனங்களில் சிஏடிஎல் நிறுவனம் சீனாவையும், எல்ஜி கெம் நிறுவனம் தென்கொரியாவை சார்ந்தது. "வால்வோ" நிறுவனம் புதிய தலைமுறைகளுக்கென்று தயாரிக்கும் கார்களில் அதிகபட்சமாக எலெக்ட்ரிக் கார்கள் இடம் பெறும். அதே போல் 2025 ஆம் ஆண்டிற்குள் " வால்வோ" நிறுவனம் 50% எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. உலகளவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் வகை கார் தயாரிப்புகள் குறித்த தொழில் நுட்பத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இதனால் லித்தியம் அயன் பேட்டரி தேவை அதிகரிக்கும். எனவே பேட்டரி தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்த இரு நிறுவனங்களுக்கு அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு மூலம் சுற்றுச்சுழல் பாதிப்பை பெருமளவில் குறைக்கலாம். அதே சமயம் எலெக்ட்ரிக் பேட்டரிகள் மற்றும் உதிரி பாகங்களை மறு சுழற்சி செய்யும் வகையில் புதிய தொழில் நுட்பத்தை கண்டறிய தேவை ஏற்பட்டுள்ளது.