சிரியாவில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசியதில்
19 குழந்தைகள் உள்பட 42 பேர் பலி
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் புரட்சி நடந்து வருகிறது. அரசுப் படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில், சிரியாவின் சில முக்கிய நகரங்களை ஆக்கிரமித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை தீர்த்துகட்டும் பணியில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகளின் விமானப் படைகள் அவ்வப்போது வான்வழி தாக்குதலில் ஈடுபடுகின்றன. இந்நிலையில், ரக்கா நகரில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இரண்டாம் நாளாக நடைபெற்ற இந்த தாக்குதலில் ரக்கா நகரை ஒட்டியுள்ள பகுதியை சேர்ந்த 19 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 42 பேர் பலி என சிரியா போர் நிலவரங்களை கண்காணித்துவரும் நடுநிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.