Skip to main content

வடகொரியாவிற்கு நெருக்கமாக பறந்த அமெரிக்க போர் விமானங்கள்!

Published on 24/09/2017 | Edited on 24/09/2017
வடகொரியாவிற்கு நெருக்கமாக பறந்த அமெரிக்க போர் விமானங்கள்!

கடந்த சில மாதங்களாகவே அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே சொற்போர் நடந்துவருகிறது. இடையில் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளை மிரட்டியது வடகொரியா. மேலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா பொதுக்குழுக்கூட்டத்தில் இந்த விவகாரம் பேசப்படாமலில்லை.

செவ்வாய்க்கிழமை ஐநா பொதுக்குழுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவை வெடிகுண்டு போட்டு அழித்துவிடுவோம் என மிரட்டினார். இதையடுத்து, ட்ரம்ப் ஒரு பைத்தியக்காரர் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் காணொளியில் தோன்றி கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று வடகொரியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்காவின் பி1 பாம்பர் ரக போர்விமானங்கள் பறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தவகை விமானங்களை குண்டுவீச்சு தாக்குதல்களில் ஈடுபடுத்த முடியாது என்றாலும், இதன்மூலம் தனது போர்பலத்தைக் காட்டுவதற்காக அமெரிக்கா இதை செய்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவையும், அதன் கூட்டாளி நாடுகளையும் பாதுகாப்பதற்காக முழுசக்தியையும் பயன்படுத்துவோம் என பெண்டகன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், கொரிய தீபகற்பத்தில் நிலவிவந்து போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்