குடிநீரின் தேவை நாளுக்குநாள் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில் அல்டெர்நேட்டிவ் சோர்ஸ் என்ற மாற்றுவழி தேடல்கள் மூலம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் இயங்கிவருகின்றன. அந்த வரிசையில் பனிமலைகளில் இருந்து குடிநீரை உருவாக்க புதிய முயற்சியை எடுத்துள்ளது யுஏஇ.
புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கான உந்துதலில், அன்டார்டிகாவிலிருந்து மத்திய கிழக்கில் உள்ள பனிப்பாறைகளைத் தக்கவைதத்து அதன்மூலம் குடிநீர் பிரச்னையை தீர்த்துக்கொள்ள யுஏஇ எனப்படும் யுனைடெட் அரப் இமிரேட்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ஆலோசகமான பியூரோ லிமிடெட் கூறுகையில், ஐஸ்பெர்க் திட்டத்திற்கான ஒரு வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளோம். இந்த திட்டத்தின் பல்வேறு கட்டங்களை இந்த வலைத்தளம் முன்னிலைப்படுத்தும்.
இந்த திட்டம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்களின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு பயன்படுத்துகிற 'இயர்ஸ் ஜெயேடு' முன்முயற்சியுடனும், ஒத்துழைப்புடன் இந்த லட்சிய திட்டத்தின் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மூன்றாவது உலக நாடுகளின் நீர் தேவைகளுக்கு ஒரு புதிய மாற்றுவழியை தேடும் முயற்சியாக இருக்கும் என்ற மனப்பாண்மையிலேயே இந்த திட்டம் முன்வைக்க வைக்கப்பட்டிருக்கிறது. உலகளாவிய நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஆதரவாக இந்த திட்டம் செயல்படுகிறது.
மத்திய கிழக்கின் வறண்ட பகுதிகளில் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவதே இந்த திட்டம். இதற்காக முதலில் இரண்டு பனிமலைகள் இந்த திட்டத்தில் பயன்படுத்தவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.