மாதக்கணக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போரில் தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் ராணுவத்தினர் மீது ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல்வேறு எதிர் நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி வெளியிட்டு வருகிறார். அண்மையில் பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், காணொளி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, 'சர்வாதிகாரிகளுக்கு திரைப்பட இயக்குநர்கள் பதிலடி கொடுக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டிருந்தார்.
உக்ரைன்-ரஷ்யா போர் 100 நாட்களை எட்டிய நிலையில் தங்களுக்கே வெற்றி என அதிபர் செலன்ஸ்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடந்து வருகிறது. இதுவரை நான்காயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இந்த போரில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போரால் லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். உக்ரேனின் 20 சதவீத இடங்களை ரஷ்யா கைப்பற்றியதாகக் கூறப்படும் நிலையில் தங்களுக்குதான் வெற்றி என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.