உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 13,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அமெரிக்காவில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,000 மேற்பட்டவர்கள் இந்த தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்டுள்ள கட்டுரையில் பல அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதில், "இன்னும் சில மாதங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்று கூறுகிறார்கள். அதற்கு எந்த விதமான ஆதாரத்தையும் இதுவரை கொடுக்கவில்லை. மருந்து கண்டுபிடிக்காதவரை எதையும் நாம் முழுவதுமாக நம்ப முடியாது. விரைவில் மருந்து கடைபிடிக்கவில்லை என்றால் 2022ம் ஆண்டுவரை அமெரிக்கர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டிவரும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.