அமெரிக்கா தேசிய பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்தநாள் உற்சாகம்
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் Bei Bei என்ற பாண்டா கரடியின் இரண்டாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, பாண்டாவிற்கு ஐஸ் கட்டியில் செய்த பிறந்த நாள் கேக் மற்றும் ஆப்பிள், பியர்ஸ் போன்ற பழங்கள் கொடுக்கப்பட்டன. குழந்தை போன்று அமர்ந்து கேக்கை உண்டு மகிழும் பாண்டாவை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.