இந்தியாவுக்கு ஐ.நா. மனித உரிமைக் குழு கண்டனம்
ஐ.நா. மனித உரிமைக் குழு, 40,000 ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றும் இந்தியாவின் முடிவு உட்பட பல்வேறு விஷயங்களைக் கண்டித்துள்ளது.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 36-வது அமர்வு செப் 11 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளில் மனித உரிமைகளுக்கு எதிராக நடைபெறும் நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஹை கமிஷனர் செயித் ரவ்த் அல் ஹசன், ரோஹிங்யா அகதிகளை திருப்பியனுப்பும் இந்திய அரசின் முடிவு, பசுப் பாதுகாப்பாளர்களின் அத்துமீறும் செயல்கள், கன்னட பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை போன்றவற்றைக் கண்டித்தது.
ஏற்கெனவே இந்த வருட தொடக்கத்தில் அதிகரித்துவரும் வகுப்புவாதம், சாதி வன்முறைகள், ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதல், ஓரின பாலுறவாளர்களின் உறவை கிரிமினல் குற்றமாக அறிவித்தது போன்றவற்றைக் கண்டித்திருந்தது.