2021-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான சேவை ஆற்றியவர்களைக் கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளுக்கான பரிந்துரைகள் நடைபெற்று வருகிறது. இதில், 2021 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பெயர் இடம்பிடித்துள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவியதற்காக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன், நோபல் பரிசு குழுவிடம் பரிந்துரை செய்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், தற்போது பரிந்துரை பட்டியலில் ட்ரம்ப்பின் பெயர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.