அமெரிக்கா மின்னணு கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கடந்த சில மாதங்களாக பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகின்றது. முக்கியமாக அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'மாடல் 3' ரக கார் மூலமாக பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இந்த மாடல் கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்துவிட்டு அதே சமயம் அக்காரின் விலையும் அதிக அளவில் நிர்ணயித்தது. அதனால் அந்த ரக கார்கள் அதிகம் விற்பனையாகாமல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை அடுத்த ஆறு மாதத்திற்குள் திருப்பி தரவேண்டும் என்ற நிலையில் இருந்தது. தற்போது அந்த கடனை சமாளிக்கும் வகையில் அந்நிறுவனத்தின் புதியரக மாடல் 3-ன் விலையை அந்நிறுவனம் 35,000 அமெரிக்க டாலராக குறைத்துள்ளது. இதன் மூலம் தேக்கநிலையில் இருந்த கார்கள் விற்பனையாக வாய்ப்புள்ளது. அப்படி தேக்கநிலையில் இருந்த கார்கள் விற்று தீரும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் கடன் சுமையும் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.