Published on 21/01/2019 | Edited on 21/01/2019

கனடாவின் டொரெண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழர்களையும், தமிழ் மொழியையும் கௌரவிக்கும் வகையில் தமிழ் கீதம் எனும் பாடல் தயாரிக்கபடவுள்ளது. தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த பாடலுக்கு டி.இமான் இசையமைக்கிறார். கனடா வாழ் தமிழர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இமானுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் செய்திருந்த டீவீட்டில் 'விருது வழங்கியதற்கும், தமிழர் கீதம் பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பு தந்ததற்கும் நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் இந்த தமிழ் கீதமானது டொரெண்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை சார்பில் உருவாக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.