சிரியாவின் தனியார் உணவு நிறுவனத்தில்,
280 கிலோ எடையுள்ள பிஸ்கட் செய்து சாதனை
சிரியாவின் பாரம்பரிய உணவு வகைகளில் (மாம்மூல்) வகை பிஸ்கட் வகையும் ஒன்று. இந்த நிலையில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரை சேர்ந்த தனியார் உணவு நிறுவனம், மிகப்பெரிய பிஸ்கட் தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி, 280 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட மாம்மூல் பிஸ்கட்டை தயாரித்தது.
பிஸ்கட் தயாரிக்க தேவையான முக்கிய மூலப்பொருள் பேரீட்டம்பழம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்கள் மூலம் இந்த பிஸ்கட் தயாரிக்கும் பணியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஈடுபட்டு வந்ததாக அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். இதையடுத்து, கின்னஸ் சாதனை புத்தக நிர்வாகிகள் முன்னிலையில் இந்த பிஸ்கட் காட்சிக்கு வைக்கப்பட்டது.