
பிரதமர் மோடி வருகின்ற 23 ஆம் தேதி ஐந்து நாட்கள் பயணமாக மூன்று ஆபிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதில் முதல் நாடக ரூவாண்டாவிற்கு சென்று இரண்டு நாட்கள் அங்கு தங்கயிருக்கிறார். பின்னர் இரு நாடுகளுக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையழுத்திட இருக்கிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி ருவாண்டா நாட்டு அதிபர் பவுல் ககாமிக்கு 200 பசுக்களை பரிசலிக்க திட்டமிட்டுள்ளார். அந்த 200 பசுக்களும் ருவாண்டா நாட்டின் தட்பவெட்ப நிலையில் வளர்க்கப்பட்டது.
கிரின்கா என்ற திட்டம் 2006 ஆம் ஆண்டில் ருவாண்டா அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் என்ன என்றால், ஒரு ஏழைக்கு ஒரு பசு என்பதே. இதனால் 3லட்சத்தி50ஆயிரம் ஏழை குடும்பங்கள் பயனடைந்துள்ளார்கள். ரூவாண்டாவில் ஒருவருக்கு சிறந்த பரிசு கலாச்சார ரீதியாக கொடுக்கப்படுகிறது என்றால் அது பசுவாகத்தான் இருக்கிறது. இந்த கிரின்கா திட்டத்தில் கொடுக்கப்பட்ட பசு ஈன்றும் கன்றுகளை இன்னொருவருக்கு பரிசளித்து மகிழ்ந்து வந்துள்ளனர். 1994 ஆம் ஆண்டு நடந்த ருவாண்டா படுகொலையில் ஒரு இந்தியர் கூட கொள்ளப்படவில்லை, தற்போது வரை இந்தியர்கள் அங்கு நல்லவிதமாக நடத்தப்படுகின்றனர் போன்ற காரணத்திற்காக நன்றிகூறும் வகையில் பிரதமர் மோடி 200 பசுக்களை பரிசளிக்கிறார்.