Skip to main content

சீனாவில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
சீனாவில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு 

இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் 9-வது மாநாடு சீனாவின் சியாமென் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி உள்பட பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்கள் சீனா சென்றனர். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நான்கு நாடுகளின் தலைவர்களை சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரவேற்றார். ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி, தீவிரவாதம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்திக்கும் பிரதமர் மோடி எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.

சார்ந்த செய்திகள்