காபூலில் இன்று காலை நடைபெற்ற மனிதவெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ளது நகர்ப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டுப்பணிகள் அமைச்சகம். இந்த அமைச்சகத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள், மதியம் பணி நிறைவடைந்து வெளியே செல்லும் சமயத்தில், அதிக சத்தத்துடன் மனித வெடிகுண்டு வெடித்தது. இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போதைய நிலையில், தாக்குதலில் சிக்கிய 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குறிப்பாக ரம்ஜான் கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், எந்த விதத் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என தாலிபன் உள்ளிட்ட அமைப்புகளுடன் அந்நாட்டு அதிபர் உஸ்மான் கானி யுத்த நிறுத்த உடன்படிக்கை போட்டுள்ளார். இதனை அந்த அமைப்புகளும் ஏற்றுக்கொண்ட நிலையில், யார் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.