Published on 13/11/2018 | Edited on 13/11/2018

மார்வெல் காமிக்ஸின் இயக்குனரும், பதிப்பாளருமான ஸ்டான் லீ உடல்நல குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் காலமானார். 95 வயதான ஸ்டான் லீ கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
உலகம் பிரசித்தி பெற்ற பல காமிக் கதாபாத்திரங்களை உருவாக்கி, பதிப்பித்துள்ளார். இவருடைய படைப்புகளில் ஸ்பைடர் மேன், தோர், ஹல்க் போன்ற பல கதாபாத்திரங்களையும், அவெஞ்சர்ஸ், எக்ஸ் மேன் போன்ற அதிரடி கதைகளையும் வெளியுலகுக்கு கொடுத்துள்ளார். இவருடைய மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகமே வருத்தம் தெரிவித்து வருகிறது.