Skip to main content

தென்கொரியா விமான விபத்து; 85 பேர் உயிரிழப்பு

Published on 29/12/2024 | Edited on 29/12/2024
South Korea plane crash; 85 people lost their lives

தென்கொரியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.

ஜெரு ஏர் பிளைட் 2216 என்ற விமானம் 175 பயணிகளுடன் தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து தென்கொரியாவிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் முகான் விமான நிலையத்தில் தரை இறங்கும் பொழுது திடீரென விபத்து ஏற்பட்டது. இதனால் ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் நொறுங்கி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தினுடைய பின்புறம் முற்றிலும் சேதமடைந்து தீப்பற்றி எரிந்தது.

இந்த விமானத்தில் 175 பயணிகள் உட்பட ஆறு விமான ஊழியர்கள் இருந்துள்ளனர். முதற்கட்டமாக 62 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது 85 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோரின் நிலை என்னவென தெரியாமல் தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்