சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண்
சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் செப்டம்பர் மாதம் நடக்கிறது. அதில் சிங்கப்பூர் மக்கள் செயல்பாட்டு கட்சியை சேர்ந்த ஹலிமா யாகோப் போட்டியிடுகிறார். இதன் மூலம் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது சபாநாயகர் பதவியை ஹலிமா ராஜினாமா செய்துள்ளார். 40 ஆண்டுகளாக பொது வாழ்வில் உள்ள அவர், 2001, 2006, 2011 மற்றும் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் மலேசிய மக்களுக்கான ஒதுக்கீட்டில் போட்டியிட்டுள்ளார்.