Skip to main content

16 லட்ச ரூபாயை சாப்பிட்ட ஆடு...பதிலுக்கு பழி வாங்கிய குடும்பம்...

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

 

she

 

விவசாயம் செய்து சேமித்து வைத்த 16 லட்ச ரூபாயை ஆடு ஒன்று தின்ற சம்பவம் செர்பியா நாட்டில் நடந்துள்ளது. பல ஆண்டுகளாக விவசாயம் செய்து நிலம் வாங்குவதற்காக சேமித்து வைத்த தொகையை நிலம் விற்பவரிடம் கொடுக்க மேஜை மீது வைத்திருந்த போது, அதனை அவர்கள் வளர்த்த ஆடு சாப்பிட்டுள்ளது. இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். மேலும் தங்களது பணத்தை சாப்பிட்ட அந்த ஆட்டினை சமைத்து சாப்பிட்டுள்ளார்.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கக் கடத்தல் விவகாரம்; அதிர்ச்சியில் திருச்சி போலீசார்!

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

trichy airport gold incident police shocked started enquiry

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு மட்டும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் மற்றும் தோஹா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 8 விமானங்கள் வந்து சேர்ந்தன. அதில் வரும் பயணிகளிடம் இருந்து கடத்தல் தங்கங்களை வாங்குவதற்காக நேற்று இரவில் இருந்து காத்திருந்து மொத்த நகை மற்றும் கரன்சிகளை பெற்றுக்கொண்டு இன்று காலை திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த இடைத்தரகர் சாதிக் பாட்சா என்பவர் தன்னுடைய உறவினர்கள் 4 பேருடன் காரில் புறப்பட்டுள்ளார். அவர்களிடம் சுமார் 1 கிலோ அளவுள்ள தங்க நகைகளும், சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு கரன்சிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களைப் பின்தொடர்ந்து ஒரு காரில் 4 பேரும், 2 இருசக்கர வாகனங்களில் 4 பேரும் என மொத்தம் 8 பேர் வந்துள்ளனர்.

 

சாதிக் பாட்சா தென்னூர் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு காரில் இருந்து இறங்கும் போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி சாதிக் பாட்சாவையும், தங்க நகைகளையும் கடத்தியது. அப்போது சாதிக் பாட்சாவின் உறவினர்கள் கூச்சலிட்டதால், நோன்பு திறப்பதற்காக தொழுகை முடித்துவிட்டு பள்ளிவாசல் அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் கூச்சலிடும் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த கடத்தல் கும்பல் அங்கிருந்து சாதிக் பாட்சா உடன் நகைகளையும் தூக்கிச் சென்றனர். அதில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவர் மட்டும் காரில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்தார். அப்போது அவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

 

இந்த சம்பவங்களை திருச்சி அரசு மருத்துவமனையில் கூறியதையடுத்து, அதன்பின்னர் தான் கடத்தல் சம்பவம் நடந்தது காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து தில்லைநகர் காவல் துறையினர் தென்னூர் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று வந்த கதிரேசனிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில், கதிரேசனை ஒப்படைத்தால், நாங்கள் சாதிக் பாட்சாவை விடுவிப்போம் என்று கடத்தல் கும்பல் தெரிவித்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட போலீஸ் டீம், கதிரேசனை கைது செய்து அவரை அழைத்துக்கொண்டு சமயபுரம் பகுதியில் காத்திருந்த கடத்தல் கும்பலிடம் சென்றுள்ளனர்.

 

காவல்துறையினர் வருவதற்குள் மர்ம நபர்கள் சாதிக் பாட்சாவை அதே பகுதியில் இறக்கி விட்டு சென்றது. இதையடுத்து சமயபுரம் பகுதியில் அவரை மீட்ட காவல்துறை அவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தது. ஆனால், இதில் சாதிக் பாட்சா எவ்வளவு நகை கொண்டு வந்தார் என்பது இதுவரை தெளிவாக சொல்லப்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

தொடரும் கடத்தல் சம்பவங்கள்; சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

trichy international airport foreign currency incident 

 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (27.02.2023) மாலை சிங்கப்பூருக்கு புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் காத்திருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு ஆண் பயணி கையில் கொண்டு சென்ற கைப்பையில் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட டாலர்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 24 லட்சத்து 57 ஆயிரம் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அதேபோல் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு பெண் பயணி கொண்டு சென்ற கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தனர் அதில் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பெண் பயணியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த 45 லட்சம் மதிப்பிலான கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.