வளைகுடா நாடுகளுள் ஒன்றான சவுதியில் தற்போது மன்னராட்சி முறை நடந்து வருகிறது. அந்தநாட்டின் மன்னராக 86 வயதான சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் இருந்து வருகிறார். இந்தநிலையில் அந்தநாட்டின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அந்தநாட்டின் முடிசூடா மன்னராக மாறியுள்ளார்.
அண்மைக்காலமாக சவுதி மன்னர் சல்மான், பெரிய அளவில் பொதுவெளியில் தோன்றவில்லை. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச்சூழலில், முகமது பின் சல்மானே வெளிநாட்டு தலைவர்களை வரவேற்பதுடன், பிராந்திய மாநாடுகளையும் நடத்தி வருகிறார்.
அதேபோல் முக்கிய கூட்டங்களையும் தலைமை தாங்கி நடத்தி வருகிறார் பட்டத்து இளவரசர் வெளிநாட்டு அதிபர்களை சந்திப்பது, மாநாடுகளுக்குத் தலைமை தாங்குவது என்பது, இதற்கு முன்னர் மன்னர் உடல்நலமில்லாத போதுதான் நடைபெற்றதாக சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளையின் யாஸ்மின் ஃபாரூக் கூறியுள்ளார்.
மொத்தத்தில் முகமது பின் சல்மான் மன்னராக முடிசூட்டப்படும் முன்னரே, மன்னரின் பணிகளை கவனித்து வருகிறார்.