Skip to main content

புற்றுநோய், கருகலைப்பு, உயிர் இழப்பு... தொழிலாளர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய சாம்சங் நிறுவனம்...!

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புற்றுநோய், கருகலைப்பு மற்றும் சில தொழிலாளர்கள் உயிர் இழப்பு போன்ற விஷயங்கள் நிகழ்ந்தது. இது தொடர்பாக சியோல் நீதிமன்றத்தில் 2007-ல்  பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டது. 

 

 

ss

 

அதன்படி பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ 15 கோடி வரை இழப்பீடை, சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இழப்பீடு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிம் கி நம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். அதேபோல் செமிகண்டர் மற்றும் எல்சிடி தயாரிப்புத் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்யக்கூடிய பணியை உரியமுறையில் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திய சாம்சங்!

Published on 06/03/2022 | Edited on 06/03/2022

 

Samsung suspends sales in Russia

 

சாம்சங, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது விற்பனையை நிறுத்தியுள்ளனர். 

 

உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமைத் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அதனை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என சாம்சங் நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதேபோல், மைக்ரோசாப்ட் நிறுவனமும் விற்பனை மற்றும் சேவையை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதேசமயம், உக்ரைனில் இணையதள பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது. 

 

ஆப்பிள், சோனி, கூகுள், யூனிவர்செல், இன்டெல், பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தியுள்ளனர்.   

 

Next Story

நாட்டின் நான்காவது கோடீஸ்வரருக்கு சிறை தண்டனை... தடுமாறும் சாம்சங் நிறுவனம்...

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

samsung struggles after its chief's sentence

 

சாம்சங் நிறுவன தலைவர் லீ ஜே யோங் சிறைத் தண்டனை பெற்றுள்ள நிலையில், சாம்சங் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் முதலீடுகள் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளன. 

 

தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக லீ ஜே யோங் செயல்பட்டு வருகிறார். சாம்சங் குழுமத்தின் தலைவரும், லீ ஜே யோங்கின் தந்தையுமான லீ குன் ஹீ கடந்த ஆண்டு காலமான பிறகு அந்நிறுவனத்தின் தலைவராக லீ ஜே யோங் பொறுப்பேற்றுக்கொண்டார். 

 

இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் கீழ் இயங்கிவந்த இரண்டு இணை நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்காக, முன்னாள் தென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஹை தரப்பிற்கு லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக லீ ஜே யோங்கிற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர், மேல்முறையீட்டில் அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டு, பின்னர் தண்டனை இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பான மேல்முறையீடு வழக்கு சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

 

இதையடுத்து, இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, லீ ஜே யோங்கிற்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தென் கொரியாவின் நான்காவது மிகப்பெரிய கோடீஸ்வரரும், சாம்சங் நிறுவனத்தின் தலைவருமான இவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சாம்சங் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்புக்குப் பின்னர், பங்குச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்துள்ள சாம்சங் நிறுவனத்திற்கு எதிர்கால முதலீடுகளை ஈர்ப்பதில் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன.