Skip to main content

உக்ரைன் தலைநகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்; பிரதமர் மோடியை சந்திக்கும் நிர்மலா சீதராமன்!

Published on 24/02/2022 | Edited on 24/02/2022

 

russia - ukraine

 

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், இன்று காலை உக்ரைனை தாக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதனைதொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனின் நகரங்கள் மீது கடும் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ஏவுகணைகளை ஏவியும், போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியும் ரஷ்ய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை, ஜெர்மனி, துருக்கி உள்ளிட்ட நாடுகள் தாக்குதலை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் வலியுறுத்தி வருகின்றன.

 

பிரிட்டன், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உக்ரைக்கு தேவையான உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளனர். இந்தசூழலில் ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகரான கீவ்-விற்குள் நுழைந்து முன்னேறி வருகின்றன. இன்று இரவுக்குள் கீவ்-வை ரஷ்யா கைப்பற்றிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையே உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், வெடிகுண்டு எச்சரிக்கையை கேட்டாலோ, போர் விமான சைரன்களை கேட்டாலோ கூகுள் மேப்பை பயன்படுத்தி, அருகிலுள்ள வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களுக்கு சென்று விடுமாறு இந்தியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

 

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால், தங்கம் வெள்ளி விலைகள் அதிகரித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான  இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில் உக்ரைன்- ரஷ்யா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்கப்போவதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்