சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ்.
உலகம் முழுவதும் 26 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 75,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் 2360 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உலகம் முழுவதும் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
சீனா மற்றும் அதனை சுற்றி உள்ள நாடுகள் மட்டுமன்றி சீனாவுடன் தொடர்பே இல்லாத பல நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது மருத்துவ உலகில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை கடந்து தென் கொரியா, பிரான்ஸ், ஈரான் என உலகின் பல இடங்களிலும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலியாகி வருகின்றனர். அதேநேரம், வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு உடல்நலம் தேறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.