Published on 11/06/2019 | Edited on 11/06/2019
சமூக பிரச்சனை காரணமாக ஒரே சமுகத்தை சேர்ந்த 100 பேர் ஒரே இடத்தில் வைத்து கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் மாலி நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்துள்ளது.
இதுகுறித்து அங்குள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஊடங்கங்களுக்கு கூறுகையில், "ஒரு கிராமமே முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. 300 பேர் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக இவர்கள் அனைவருமே அப்பாவி மக்கள். மோசியாக் இனத்தை சேர்ந்த குழுவே இந்த கிராமத்தில் வசிக்கும் டோகா இன மக்களை கொன்று குவித்துள்ளனர். மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்து கொடூரமாக கொன்றுள்ளனர். பின்னர் கொல்லப்பட்ட மக்களை குவியலாக போட்டு எரித்துள்ளனர். இந்த கொடூர நிகழ்வில் அந்த கிராமமே சூறையாடப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளார்.