ஈராக்கில் பஸ்ரா நகரில் முதல் முறையாக பூனைகளுக்கான ரெஸ்டாரண்ட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த ரெஸ்டாரண்டை கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவரான அகமது தாஹர் மாக்கி என்பவர் பஸ்ராவின் தெற்குப் பகுதியில் அமைத்துள்ளார். இங்கு ஒரு இரவு பூனைகள் தங்குவதற்கு 5000 தினார்கள் வசூலிக்கப்படுகிறது. இங்கு பூனைகள் உறங்க பஞ்சு மெத்தைகள், உண்ண உணவு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிறிய அளவில் விளையாட்டு மைதானமும் உள்ளது.
இதுகுறித்து மாக்கி கூறியது, இந்த ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கக் காரணம் பூனைகளை மக்கள் தத்தெடுப்பதை ஊக்குவிப்பதற்காகதான். அதுமட்டுமல்லாமல் நீங்கள் வெளியூர்களுக்கு செல்லும்பொழுது உங்கள் செல்ல பிராணிகளை இங்கு விட்டுச்செல்லலாம். விலங்குகளை மக்கள் பார்த்துக்கொள்ளும்பொழுது அவர்கள் கருணை உள்ளம் மிகுந்தவராகின்றனர். இதுபோன்று ஒரு ரெஸ்டாரெண்ட் ஈராக்கில் பஸ்ரா நகரில் இருப்பது உன்னதமாகவும், முன்னுதாரணமாகவும் உள்ளது.