லண்டன் ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு! பயணிகள் படுகாயம்!
லண்டனில் உள்ள மெட்ரோ சுரங்க ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லண்டனில் உள்ள பார்சன்ஸ் கிரீன் எனும் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், லண்டன் நேரப்படி காலை 8.20 மணிக்கு பலத்த சத்தத்துடன் ஒரு பொருள் வெடித்துள்ளது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் இருந்து இறங்கி ஓடினர். பல பயணிகளின் முகங்களில் லேசான காயங்களும், சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஒரு வெடிக்காத பொருள் கைப்பற்றப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.