Published on 03/04/2018 | Edited on 03/04/2018
சீனாவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட குவிங் வம்சத்தின் பீங்கான் கிண்ணம் 198 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
சீனாவை சேர்ந்த சீனப் பேரரசர் காங்க்ஸி உபயோகித்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குவிங் வம்ச பீங்கான் கிண்ணத்தை சொத்பெயஸ் எனும் கலைப் பொருட்களை விற்கும் நிறுவனம் ஏலம்விட்டது. ஏலம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே 30 மில்லியன் டாலருக்கு விற்பனையானது. இந்திய மதிப்பில் அதன் மதிப்பு 198 கோடியாகும்.
குவிங் வம்சம் சீனாவை ஆண்ட கடைசி அரச வம்சமாகும். 1644ஆம் ஆண்டிலிருந்து 1912இல் சீனா குடியரசாகும் வரை இந்த வம்சம் தான் சீனாவை ஆண்டது. குவிங் வம்சத்திற்கு முன்பு மிங் வம்சம் சீனாவை ஆண்டது.