
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று காலை 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக வில் ஸ்மித்துக்கு கொடுக்கப்பட்டது.
இவ்விழாவில் வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் முடியற்ற தலையை "ஜி.ஐ. ஜேன்" படத்தில் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு தொகுப்பாளர் கிரிஸ் ராக் கிண்டலடித்தார். இதைக் கேட்ட வில் ஸ்மித் உடனே இருக்கையிலிருந்து எழுந்து ஆஸ்கர் மேடை ஏறி தொகுப்பாளர் கிரஸ் ராக்கை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ஆஸ்கார் விழா மேடையில் கன்னத்தில் அறைந்த காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்டார் வில் ஸ்மித். தனது தவறுக்கு ஆஸ்கர் குழுவினரிடம் மன்னிப்புக் கேட்டநிலையில் கிரிஸ் ராக்கிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். ''விழாவில் நான் நடந்து கொண்ட செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமின்றி மன்னிக்க முடியாதது. என் மனைவியின் தலைமுடி சிகிச்சை குறித்த ஜோக்கை ஏற்றுக் கொள்ள முடியாததால் அவ்வாறு அறைந்துவிட்டேன். அன்பு மற்றும் இரக்கம் நிறைந்த இந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை'' என இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகர் வில் ஸ்மித்.