Skip to main content

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது!  

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

darnella frazier

 

கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், மினியாபோலிஸ் நகர போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரபலங்களும் ஆதரவளித்ததோடு, ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்கு கண்டனமும் தெரிவித்தனர். ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கை பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.

 

ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்படுவதை டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண் வீடியோ எடுத்தார். அப்போது அவருக்கு 17 வயது. டார்னெல்லா ஃபிரேசியர் எடுத்த அந்த வீடியோவே உலகம் முழுவதும் பரவி, அமெரிக்காவில் போராட்டம் வெடித்ததற்கும், உலக முழுவதும் அதற்கு ஆதரவு எழுவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.

 

இந்தநிலையில், டார்னெல்லா ஃபிரேசியருக்கு சிறப்பு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளில் வழங்கப்படும் உயரிய விருதாக புலிட்சர் விருது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்