Published on 07/01/2020 | Edited on 07/01/2020
குடிகாரர்களை ஓவர் டேக் செய்யும் விதத்தில் பன்றிகள்மது அருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் டாயுமான் பகுதியில் பிரபலமான சூப்பர் மார்க்கெட் உள்ளது. நேற்று மதியம் பொதுமக்களின் கூட்ட நெரிசலில் சூப்பர் மார்கெட் திணறிய சமயத்தில், அந்த கடையில் மூன்று பன்றிகள் அதிரடியாக புகுந்தன. இதை கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து தெறித்து ஓடினார்கள்.
![fgh](http://image.nakkheeran.in/cdn/farfuture/1XkPIQD-l2Z7m3-ZD8APSnyvm5L49u0DgqunF1zMgLc/1578420991/sites/default/files/inline-images/cfgh_2.jpg)
ஆனால், ஆடி அசைந்து சூப்பர் மார்கெட்டுக்கு சென்ற பன்றிகள் அங்கு இருந்த பொருட்களை சாப்பிட ஆரம்பித்தன. இதன் உச்சகட்டமாக மது வகைகள் இருந்த இடத்திற்கு சென்ற அந்த பன்றிகள், அதனை முகர்ந்து பார்த்துள்ளன. அந்த வாசனை பன்றிகளுக்கு பிடித்துவிடவே பாட்டிலை உடைத்து மதுவினை குடித்துள்ளன. இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகினறது.