பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைக்க நைஜீரிய அரசு புதிய முயற்சி ஒன்றை கையாள முடிவு செய்துள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் நாடு நைஜீரியா. இங்கு மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே வறுமையும், ஊழலும் பரவிக்கிடக்கிறது. பாரம்பரிய சமூகச் சூழலில் வாழும் இந்த மக்கள், இயல்பாகவே பெண் குழந்தைகளுக்கான கல்வியைத் தவிர்த்து வந்தனர். ஆனால், அதிலிருந்து மீண்டு தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப அவர்கள் நினைத்தாலும், தற்போது அது முடியாத காரியமாகி விட்டது.
இந்நிலையில், பெற்றோர் தங்களது பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப நைஜீரிய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினால், அரசு தரப்பிலிருந்து பெற்றோருக்கு ஆண்டுதோறும் 47 டாலர்கள் (அ) ரூ.2,700 நல உதவியாக பெற்றோருக்கு வழங்கப்படும். இருந்தாலும், சர்வதேச குழந்தைகள் அமைப்பான யூனிசெப் 2014ஆம் ஆண்டே இதே திட்டத்தை நைஜீரியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது, அந்நாட்டு அரசும் அதே முயற்சியை மேற்கொண்டுள்ளது.