Published on 29/01/2021 | Edited on 29/01/2021
![painting](http://image.nakkheeran.in/cdn/farfuture/RXN1EimWGljkU6fuEJgv1IakbPh9sImJ9KlUUbidhWg/1611916665/sites/default/files/inline-images/pai-im.jpg)
சாண்ட்ரோ போடிசெல்லி, 1440-களில் இருந்து 1510 வரை வாழ்ந்த புகழ்பெற்ற ஓவியராவர். இவரின் ஓவியம் ஒன்று, அமெரிக்காவில் நேற்று ஏலத்திற்கு வந்தது.
சாண்ட்ரோ போடிசெல்லி 1400களின் இறுதியில் வரைந்த, இளைஞனின் ஓவியத்திற்கு இரண்டு பேர் போட்டியிட்டனர். வெறும் ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே நீடித்த இந்தப் போட்டியில், ஒருவர் அந்த ஓவியத்தை 80 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுத்தார்.
அதன்பிறகு மற்ற கட்டணங்கள் மற்றும் கமிஷன் ஆகியவற்றை சேர்த்து, அந்த ஓவியம் 92.2 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு 670 கோடிகளுக்கு மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது