இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, டீசல், மின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சூழல் குறித்து இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று நாடுகளில் இலங்கை தூதரகங்களை மூட இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.
இலங்கையில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சூழல் குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இலங்கை சபாநாயகர் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிலையில் நாளையும், நாளை மறுநாளும் இதுகுறித்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்நிலையில் நார்வேயின் ஒஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஈராக்கின் பாக்தாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள இலங்கை தூதரகங்களை இலங்கை மூட முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நிதி சிக்கன நடவடிக்கையாக இந்த முடிவை இலங்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இந்த மூன்று நாடுகளில் இலங்கை தூதரகங்கள் மூடப்பட இருக்கிறது.