Skip to main content

மீண்டும் கொரிய தீபகற்பத்தை பதறவைத்த 'வடகொரியா'

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

nn

 

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். இந்நிலையில் மீண்டும் கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வை அரங்கேற்றி உள்ளது வடகொரியா.

 

ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜப்பானை நோக்கி வடகொரிய ராணுவம் ஏவுகணை வீசி உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அத்துமீறல் ஈடுபட்டு வரும் வடகொரியாவுக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறது. ஏற்கனவே நிகழ்ந்த இந்த சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள் இன்று காலை ஜப்பான் கடல் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளை வீசி மீண்டும் கொரிய தீபகற்பத்தை பரபரப்பாகியுள்ளது வடகொரியா.

 

 

சார்ந்த செய்திகள்