பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவைவிட்டு வெளியேறினர்.
இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்துவரும் அவரை இந்தியா கொண்டுவருவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் நீதிமன்ற சாலை பகுதியில் புதிய கெட்டப்பில் சுற்றி திரியும் வீடியோ வெளிவந்துள்ளது.
லண்டனை சேர்ந்த டெலிகிராப் பத்திரிகையாளர் நிரவ் மோடி சாலையில் நடந்து செல்லும் பொது அவரை இடைமறித்து பேசியுள்ளார். அப்போது அவர் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 74 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டில் அவர் வாழ்ந்து வருவதாகவும் அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிரவ் மோடி இந்தியாவிலிருந்த பழைய கெட்டப்பை மாற்றி தாடி, முறுக்கு மீசையுடன் அந்த வீடியோவில் தோன்றியுள்ளார். 13,000 கோடி ஏமாற்றி சென்ற நிரவ் மோடி லண்டனில் சுதந்திரமாக சுற்றி திரியும் இந்த புதிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Exclusive: Telegraph journalists tracked down Nirav Modi, the billionaire diamond tycoon who is a suspect for the biggest banking fraud in India's historyhttps://t.co/PpsjGeFEsy pic.twitter.com/v3dN5NotzQ
— The Telegraph (@Telegraph) March 8, 2019