Published on 19/08/2020 | Edited on 19/08/2020
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகெங்கும் மின்னல் வேகத்தில் பரவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்க ஒவ்வொரு நாட்டு அரசும் முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றன. கரோனா பாதித்த முதல் இரண்டு இடங்களில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரேசிலில் கடந்த 24 மணிநேர பாதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 43,999 ஆகவும், பலி எண்ணிக்கை 1,358 ஆகவும் பதிவாகியுள்ளது. அதே போல பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 47,784 ஆகவும், பலி எண்ணிக்கை 1,352 ஆகவும் பதிவாகியுள்ளது.