நியூசிலாந்தில் தொலாகா பே கடற்பகுதியில் எதிர்பாராத விதமாக கடலில் மாட்டிக்கொண்ட ஒருவர் தனது ஜீன்ஸ் பேண்ட் மூலம் உயிர் தப்பிய நிகழ்வு நடந்துள்ளது. கரையில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் படகு ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த சகோதரர்கள் பயணித்த போது, எதிர்பாராத விதமாக அதில் ஒருவர் கடலில் விழுந்து விட அவரது சகோதரர் அதை கவனிக்கவில்லை. சற்று நேரத்தில் தனது சகோதரரை காணவில்லை என்பதை அறிந்தவர், நகராட்சி ஹெலிகாப்டர் மீட்பு சேவைக்கு தகவல் கொடுக்க, மூன்றரை மணி நேர தேடுதலுக்குப்பின் கடலில் வீஸ்ந்த நபர் மீட்கப்பட்டார். கடலில் விழுந்த அந்த நபர் தமது ஜீன்ஸ் பேண்டில் காலின் நுனி பாகங்கள் இரண்டையும் முடிச்சுப்போட்டு அதில் நீர், காற்று ஆகியவற்றை நிரப்பி இடுப்பு பகுதி துணியை இறுக்கி மிதவையாக பயன்படுத்தி உயிர் பிழைத்துள்ளார். தனது சமயோஜித புத்தியால் அவர் உயிர் பிழைத்த சம்பவம் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.