Published on 18/09/2021 | Edited on 18/09/2021

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்தில், தலிபான்களைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு தலிபான் அதிகாரிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த தாக்குதலில் 20 பேர் காயமடைந்ததாகவும், அதில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் அத்தகவல்கள் கூறுகின்றன.
ரோட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மீது தலிபான் வீரர், வாகனத்தை ஏற்றியபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததென்று உள்ளூர் அதிகாரிகள் கூறியதாக ஆப்கான் ஊடகம் ஒன்று கூறியுள்ளது. தலிபான் அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
அதேபோல் ஆப்கான் தலைநகர் காபூலிலும் குண்டு வெடித்ததாகவும், அதில் இரண்டு பெயர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.