Published on 08/12/2020 | Edited on 08/12/2020
உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இது இமய மலையில், நேபாள நாட்டிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு, நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறித்து, சந்தேகம் எழுந்தது. ஆகையால் நேபாளம், இச்சிகரத்தின் உயரத்தை மீண்டும் கணக்கிடும் பணியைத் தொடங்கியது. தற்போது, எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேபாள நாட்டின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி எவரெஸ்ட் சிகரத்தின் தற்போதைய உயரம் 8848.86 மீட்டர் ஆகும். ஏற்கனவே 8848 மீட்டராக இருந்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், தற்போது 0.86 மீட்டர் அதிகரித்திருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.