Skip to main content

முதல் தடவை சறுக்கிய 'நெட்பிளிக்ஸ்'

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

 

'Netflix' slides for the first time

 

திரையரங்குகளுக்கு குடும்பமாக சென்று திரைப்படங்களை பார்வையிட்ட காலங்கள் மாறி இணையதளம் வாயிலாக ஓ.டி.டி தளங்களில் திரைப்படங்களைப் பார்க்கும் கலாச்சாரத்திற்கு மாறும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓ.டி.டி தளத்தில் முன்னணி நிறுவனமாக இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 100 நாட்களுக்குள் இரண்டு லட்சம் சந்தாதாரர்களை இழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பங்குச் சந்தையிலும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளது.

 

நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இவ்வளவு அதிகப்படியாக சந்தாதாரர்களை இழப்பது இதுவே முதல் தடவை என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தியிருந்தது. அந்தவகையில் ரஷ்யாவில் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் தனது சேவையை நிறுத்தியது. இதுவே சந்தாதாரர்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் இழந்ததற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த காலாண்டில் மட்டும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் 1.6 பில்லியின் டாலராக இருக்கும் நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சுமார் 25 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தனைக்கும் கடந்த பத்து வருடங்களாக ஓ.டி.டி தளங்களில் முன்னணி இடம் வகித்து வருகிறது 'நெட்பிளிக்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொங்கல் பண்டிகை; ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய அப்டேட்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
New update of 'Vidamuyarchi' movie

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த பிறகு சில தினங்களுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தொடங்கிய தாக்குதல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

The ceasefire ended; The attack resumed

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.