அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது.2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இதில் அதிக அளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ள அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அமெரிக்காவில் 3.3 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பால் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9616 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 3.3 லட்சத்தில் சுமார் 25,000 பேருக்கு கரோனா இருப்பது நேற்று ஒரே நாளில் உறுதிசெய்யப்பட்டது. கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரில் மட்டும் இதுவரை 4000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அதேபோல நியூஜெர்ஸியில் 846 பேரும், மிச்சிகனில் 540 பேரும், கலிபோர்னியாவில் 324 பேரும் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.இதுவரை அமெரிக்காவின் 50 மாநிலங்களில் கரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.