![modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/6QH16ohL5ESEfDtWVSUeA_nWJzopIjBLJ6C2WyjZaqM/1540382478/sites/default/files/inline-images/modi_44.jpg)
2018 ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதிக்கான விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக, சியோல் அமைதி விருது வழங்கும் கமிட்டி இன்று காலை அறிவித்துள்ளது. மேலும் அந்த கமிட்டி எதற்காக மோடிக்கு இந்த விருது வழங்குகிறார்கள் என்று தெரிவித்தும் உள்ளது. அதில், ”மோடி இந்திய பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளார், சர்வதேச நாடுகள் அனைத்துடனும் ஒற்றுமையை வளர்க்கிறார். மனித வளர்ச்சியை மேம்படுத்துகிறார். இந்தியாவில் இருக்கும் ஊழலை ஒழிக்க பல திட்டங்களை செய்ல்படுத்துகிறார். இந்தியாவில் இருக்கும் ஜனநாயகத்தை காப்பாற்றுகிறார்” என்கின்றனர்.
இந்த விருதை மனதார ஏற்றுக்கொள்வதாக மோடியும் தெரிவித்துள்ளார். மோடிக்கு விருதை பெற்றுகொள்ள நேரம் இருக்கும்போது பெற்றுகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருதின் மூலம் தென் கோரியாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நட்பு மேலும் வலுவாகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைதிக்கான விருதை மோடி பெற்றிருப்பதால் பல நாட்டின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா, மோடி இந்த விருது பெறுவதால் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
இந்த சியோல் அமைதிக்கான விருது 1990 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விருதை பெறப்போகும் 14ஆம் நபர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.