Skip to main content

கடலில் விழுந்து நொறுங்கியது, காணாமல்போன விமானம்!!!

Published on 29/10/2018 | Edited on 29/10/2018

 

இந்தோனேசியா, ஜகர்த்தாவிலிருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு  சென்ற லயன் ஏர் விமானம் நடுவானில் மாயமானது. ஜகர்த்தாவில் இருந்து புறப்பட்ட 13வது நிமிடத்தில் விமானம் மாயமாகியுள்ளது. காலை 6.33 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இப்போதுவரை தகவல்கள் இல்லை. விமானத்தை தேடும்பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது என்றும், 188 பயணிகளின் நிலை என்ன என தெரியவில்லை, விமானத்தின் பாகங்களைத் தேடி வருகிறோம். என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து-பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

Planes crash head-on - shocking video footage


விமானங்கள் ஒன்றுக்கொன்று நேராக மோதி விபத்து ஏற்பட்ட காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் விமான சாகச கண்காட்சியில் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் விமானப்படை சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு விமானங்கள் கலந்து கொண்டு சாகசங்களை நிகழ்த்தி காட்டின. இதில் கலந்துகொண்ட பெரிய ரக போயிங் பி17 குண்டுகள் வீசும் விமானமும், ஒரு சிறிய ரக விமானமும் வானில் சாகசம் செய்யும் வகையில் பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக சிறிய விமானம் பெரிய விமானத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டு இரு விமானங்களும் தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதிலிருந்த ஆறு பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

 

Next Story

நேபாள நாட்டு விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

நேபாள நாட்டு அரசின் பொதுத்துறை நிறுவனம் தாரா ஏர்லைன்ஸ். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இன்று (29/05/2022) காலை 09.55 மணிக்கு பொக்காராவில் இருந்து புறப்பட்டு, ஜோம்சோமுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள் மற்றும் மூன்று ஜப்பானியர்கள், விமான பணியாளர்கள் என மொத்தம் 22 பேர் பயணம் செய்தனர்.

 

விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியது. இதையடுத்து, மாயமான விமானத்தைத் தேடும் பணியை நேபாள நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் நேபாள நாட்டு அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாயமான விமானம் கடைசியாக, தவுலகிரி மலைப்பகுதியில் காணப்பட்டதாகவும், அங்கு தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விமானம் விழுந்த இடம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேபாளத்தின் மஸ்டாங் மாவட்டத்தின் கோவாங் கிராமத்தில் விமானம் விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் விமானத்தின் நிலை குறித்து இன்னும் தகவல்  தெரியவில்லை என திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.