Skip to main content

டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் இறந்த பத்திரிக்கையாளர் கஷோகி தேர்வு.

Published on 11/12/2018 | Edited on 11/12/2018

 

kas

 

டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் இறந்த பத்திரிக்கையாளர் கஷோகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடும் போது, ”சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர் அவர்" என கூறியது. சவுதி அரசையும் அதன் இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக  விமர்சித்த பத்திரிகையாளர் ஜமால் கடந்த அக்.2-ம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களைப் பெற துருக்கி சென்றார். அங்கு இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இவர் சவுதி இளவரசர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் நிலவி வரும் நிலையில் ஜமால் கொலை வழக்கில் சவுதியால்  கைது செய்யப்பட்டுள்ள அந்நாட்டைச்  சேர்ந்த அதிகாரிகள்  5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க அந்நாடு ஆலோசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரபிக் கடலில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்; நடுக்கடலில் பரபரப்பு

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
incident on a commercial ship in the Arabian Sea!

சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.  

சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு எம்.வி.செம் என்ற வணிகக் கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றி வந்தது. அந்த கப்பல் குஜராத் மாநிலம், போர்பந்தர் பகுதியிலிருந்து 217 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், கப்பல் தீப்பிடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட தகவலை அடுத்து கடலோர படையினர் உதவிக்கு விரைந்தனர்.

அங்கு விரைந்த கடலோர படையினர், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதன் பின்னர், கப்பலில் இருந்த 20 இந்தியர்கள் உட்படக் கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தீ பற்றியதால் கப்பலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு இந்திய கடற்படை போர்க்கப்பலும் அங்கு விரைந்துள்ளது.

இது குறித்து கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது, “சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படை அதிகாரிகள், அங்கு விரைந்து உதவ புறப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். 

Next Story

"கடவுளின் கோபத்திற்கு இஸ்ரேல் ஆளாகும்" - நாடாளுமன்றத்தில் எம்.பியின் கடைசி உரை

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
turkey MP who lost his lives while speaking in Parliament about criticized israel

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹசன் பிட்மெஸ் (53). இவர், அந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய ஃபெசிலிட்டி கட்சியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அதில், இஸ்ரேலுடனான துருக்கி ஆளும் கட்சியின் உறவை விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்து பேசிய அவர், திடீரென்று மயங்கிக் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதறினர். அதன் பின்பு, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மெஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தும் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்” என்று கூறினர். நாடாளுமன்றத்தில் அவர் தனது கடைசி உரையாக “வரலாற்றிலிருந்து தப்பித்தாலும், கடவுளின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாது” என்று துருக்கி ஆளுங்கட்சியையும் இஸ்ரேலையும் விமர்சித்துப் பேசி தனது உரையை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.