Skip to main content

துண்டுதுண்டாக கஷோக்கியின் உடல்...சிதைந்த முகம்...சவூதி அதிகாரியின் தோட்டத்தில் கண்டுபிடிப்பு???

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
kashogi


சவூதி பத்திரிகையாளர் ஜாமால் கஷோகி, கடந்த அக் 2-ஆம் தேதி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்றார். அதன் பிறகு அவரை காணவில்லை. அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் அவர் கட்டுரை எழுதிவந்ததால் இந்த விஷயம் தொடர்பாக அமெரிக்கா ஊடகங்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பத் தொடங்கின. அதன் பின், இரண்டு வாரங்களுக்குப் பின்பு சவுதி தூதரகத்தில் ஜாமால் கஷோகி கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக துருக்கி அரசும் அறிவித்தது. அதனை தொடர்ந்து இரண்டு நாட்க்களுக்கு முன், கஷோகி மரணம் அடைந்ததாக சவுதி அரசும் ஒப்புகொண்டது. 
 

மேலும், கஷோகி மரணம் தொடர்பாக தன்னுடைய உளவுத்துறைத் தலைவர் உட்பட 18 பேரைக் கைது செய்திருப்பதாகவும் பத்திரிகையாளர் கொலையில் தொடர்பு உடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவுதி அரசு அமெரிக்காவிற்கு உறுதியளித்திருந்தது.
 

உலகம் முழுவதும் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் பலவித கோணத்தில் இந்த சம்பவத்தை பற்றி துப்புரவு செய்ய தொடங்கிவிட்டார்கள். துருக்கி அரசாங்கம், சவூதி அரசு கொலை செய்துள்ள எங்களிடம் ஆவணம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மரணமடைந்த கஷோகியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியான தகவலில் கஷோகியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டும். அவரது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கஷோகியின் உடல் துருக்கியிலுள்ள சவூதி தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்