Published on 09/01/2019 | Edited on 09/01/2019
![ugkyhj](http://image.nakkheeran.in/cdn/farfuture/Zt2qlka7I--Mpna1th2pKhGbE26aq64t8z01vX4_JFI/1547047686/sites/default/files/inline-images/fisherman-in_0.jpg)
ஈரான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேரை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவினர் கோரிக்கை வைத்துள்ளனர். குளச்சல் மற்றும் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். வழக்கம் போல் கடந்த 5ம் தேதி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய போது எதிர்பாராதவிதமாக அவர்கள் படகு ஈரான் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதைனை தொடர்ந்து ஈரான் கடற்படையினரால் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் 3 பேரையும் மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்களின் உறவினர்கள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.