ஈரான் மற்றும் சவுதி ஆகிய நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்பதற்கு எதிராக அந்நாட்டு பெண்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஈரான் நாட்டில் போராட்டம் ஒன்றில் தனது ஹிஜாப்பை கழட்டியதற்காக பெண் ஒருவருக்கு ஒராண்டு சிறைத் தண்டனை பெற இருக்கிறார். இது தொடர்பாக ஏ.எஃப்.பி வெளியிட்ட செய்தியில்,” ஈரானைச் சேர்ந்தவர் விதா முவாஹெத் என்ற பெண் வழக்கறிஞர் கடந்த ஆண்டு 2018 ஆம் ஆண்டு ஹிஜாப் கட்டாய சடத்துக்கு எதிராக தான் தலையில் கட்டியிருந்த ஹிபாப்பை கழட்டினார். இதன் காரணமாக இவர் ஓராண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க இருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் விதா ஏற்கனவே இதே போன்ற ஒரு வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்துள்ளார். இதனால் இந்த முறை அவருக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த பெண்ணுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.