தீவிரவாத இயக்கங்களுக்கு ஈரான் உதவி செய்வதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை சில மாதங்களுக்கு முன் ரத்து செய்து பொருளாதார தடைகளை விதித்தார். மேலும் ஈரானுக்கு பல நெருக்கடிகளை அமெரிக்கா கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இஹற்கான எதிர்வினையாக அமெரிக்காவை மிரட்டும் வகையில் ஈரான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, "இன்னும் 10 நாளில், அணு ஒப்பந்த வரம்பை மீறி, யுரேனியம் செரிவூட்டல் அளவை அதிகப்படுத்தவுள்ளோம். இதன் மூலம் அணு ஆயுத மூலப் பொருள் தயாரிப்போம்" என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள அந்த அறிக்கை அமெரிக்காவின் செய்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே அமைந்துள்ளது.
இதுகுறித்து ஈரான் அணுசக்தி ஏஜென்சியின் செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில்,"நாட்டின் தேவைக்கு தகுந்தபடி யுரேனியம் செரிவூட்டல் அளவு அதிகரிக்கப்படும். இது 3.67 சதவீதத்திலிருந்து எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அதிகரிக்கப்பட்டு, அவ்வளவு வேண்டுமானாலும் தயாரிப்போம்" என தெரிவித்துள்ளார்.